வேட்பாளர் பதவியை சஜித்திற்கு ரணில் வழங்கமாட்டார்?

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவியை கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கமாட்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க ஆருடம் வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறினார்.

யாப்பின் அடிப்படையில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களுக்கும், கட்சியின் தொண்டர்கள் எடுக்கின்ற பெரும்பான்மைத் தீர்மானத்திற்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி காணப்படுவதாகவும் இந்த நிலை தற்போது உச்சத்தை அடைந்திருப்பதே கட்சியின் நெருக்கடிக்கு காரணம் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டினார்.

இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியற் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் கட்சிக்குள் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவான குழுவினர் இன்றைய தினமும் மாத்தறையில் மக்கள் கூட்டம் நடத்தப்படுகின்றது.

இப்படியான நிலையில் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த இறுதித்தீர்மானம் எடுக்கின்ற செயற்பாடு இன்னும் இழுபறி நிலையிலேயே உள்ளது.

You May also like