சஜித்திற்கு ஆதரவளித்தோருக்கு எதிராக ரணிலின் நடவடிக்கை

கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க மற்றும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

இந்த இரண்டு உறுப்பினர்களுடைய செயற்பாடுகள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வழங்கிய முறைப்பாடுகளுக்கு அமைவாக அவர் வழங்கிய ஆலோசனைப்படி ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அக்கிலவிராஜ் காரியவசத்தின் தலையீட்டின் அடிப்படையில் இந்த ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இதற்காக விசாரணைக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

அஜித் பி பெரேரா மற்றும் சுஜீவ சேனசிங்கவுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கக் காரணம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவும் கட்சியின் ஒழுக்கம், சட்டங்களுக்கு எதிராக செயற்பட்டு கருத்துக்களை வெளியிட்டு, கட்சியின் ஐக்கியத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் ஏகாதிபத்திய ராஜபக்சவின் குழுமத்திற்கு அரசியல் ரீதியான இலாபத்தை ஏற்படுத்திக் கொடுத்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் இன்று வெள்ளிக்கிழமை மாத்தறையில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட மாபெரும் மக்கள் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ எந்த வகையிலான ஒழுக்காற்று நடவடிக்கைக்கும் தமது உறுப்பினர்கள் அஞ்சப்போவதில்லை என்று அறிவித்தார்.

You May also like