தெரிவுக்குழு கோரிக்கையை நிராகரித்த மைத்திரி

உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்திவரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் ஆஜராகாமல் இருப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக தீர்மானம் எடுத்துள்ளார்.

விசாரணைக்காக முன்னிலையாகும்படி ஜனாதிபதி சிறிசேனவுக்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு அழைப்பு விடுத்திருந்தது.

இதற்காக மூன்று திகதிகளையும் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்து கடிதமொன்றையும் அனுப்பியிருந்தது தெரிவுக்குழு.

இருப்பினும் அப்படியொரு கடிதம் தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று தனது நெருங்கியவர்களிடம் ஜனாதிபதி கூறியிருப்பதாக அறியமுடிகிறது.

கடிதம் கிடைத்தாலும் தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகாமல் இருப்பதற்கு ஏற்கனவே எடுத்த முடிவில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்பதையும் ஜனாதிபதி தெரிவித்திருப்பதாக நம்பகரமாக தெரியவருகின்றது.

You May also like