கோட்டா- மைத்திரி-மஹிந்த சந்திப்பு விரைவில்

ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பு கொழும்பில் வருகிற தினங்களில் நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்புக்கு முன்னதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்கவுள்ளார்.

இதேவேளை கடந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை ஜனாதிபதி மைத்திரி சந்தித்திருந்தார்.

மஹிந்த அணிக்கு எதிராக 2015இல் எடுத்த தைரியமான முடிவை எடுக்குமாறு சந்திரிகா அம்மையார் இதன்போது வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May also like