விசாரணைக்கு தயார்: மஹேஷ் சேனாநாயக்க அதிரடி அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல் குறித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு மீண்டும் ஒருமுறை விசாரணைக்கு அழைத்தால் முன்னிலையாவதற்கு தாம் தயார் என்று முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டிக்கு இன்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்ட அவர் ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் மல்வத்துப்பீட மகாநாயக்கர்; திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து ஆசிபெற்றார்.

பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறினார்.

You May also like