மீண்டும் மைத்திரி-சந்திரிகா இணைவு:இனி இருவரும் ஒரேமேடையில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் ஒன்றாக கலந்துகொண்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கான சந்திப்பு இன்று பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

இதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் கலந்துகொண்டமை விசேட அம்சமாக விளங்கியது.

இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி சிறிசேன, ஜனாதிபதி தேர்தல் மற்றும் வேட்பாளர் குறித்து எவரும் இப்போதைக்கு வாய்த்திறக்க வேண்டாம் என்று ஆலோசனை கூறியிருக்கின்றார்.

அதேபோல அடுத்த தேர்தல்களில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாருடன் அரசியல் செய்வதற்காக ஒரே மேடையில் அமரவும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி சிறிசேன தெரிவித்திருப்பதாக அறியமுடிகின்றது.

ஜனாதிபதி தேர்தல் குறித்த தனது நிலைப்பாட்டினை தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே வெளியிடுவதாகவும் ஜனாதிபதி இதன்போது திட்டவட்டமாக கூறியுள்ளார்.

You May also like