மீண்டும் மஹிந்த – மைத்திரி சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையே மீள் இணக்கப் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான இணக்கம் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு இடையிலான கலந்துரையாடலின்போது எட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான 07ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் கொழும்பு விஜேராமயவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று காலை நடைபெற்றது.

சுமார் ஒன்றரை மணிநேரமாக இடம்பெற்ற இந்தச் சந்திப்பு வெற்றிகரமாக முடிவடைந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச எமது செய்திப் பிரிவுக்குத் தெரிவித்தார்.

கடந்த 06 கட்டப் பேச்சுக்களில்போன்று இம்முறை நடைபெற்ற சந்திப்பில் இருதரப்பிலிருந்தும் கலந்துகொண்ட பிரதிநிதிகள் மாற்றியமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, சுதந்திரக் கட்சியின் புதிய பொருளாளரான லசந்த அழகியவண்ண ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதேபோன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பாக முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

You May also like