முக்கிய தீவிரவாத சந்தேக நபர்கள் இன்று கைது:முழுவிபரம் இதோ!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் தீவிரவாத தாக்குதலை நடத்திய உள்ளுர் தீவிரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தலைவர் சஹ்ரானின் சகாக்கள் இருவரை பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை பிரதேசத்தில் வைத்து இவர்கள் இருவரும் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதற்கமைய கண்டி வத்தேகதர பொல்கொல்லையைச் சேர்ந்த மொஹமது ரயிசுத்தியன் அப்துல் ரஹ்மான் என்ற அபுஅனஸ் மற்றும் மாவநெல்ல கொன்தெனியாகொடயைச் சேர்ந்த செய்னுல் ஆப்தின் ஹஸ்ல என்ற அபுராவா ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

இவர்களில் அபு அனஸ் என்பவர் நுவரெலியாவில் இருந்த சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயிற்சிகளைப் பெற்றவர் என்பதோடு, அபுராவா என்பவர் அம்பாந்தோட்டை பயிற்சி முகாமில் பயிற்சிகளை நிறைவுசெய்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You May also like