அவுஸ்திரேலிய எழுத்தாளர் அதிரடியாக கைது

அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்ற சீன எழுத்தாளரான யங் ஹன்ஜுன் சீன அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனத் தலைநகர் பீஜிங்கில் கடந்த ஜனவரி மாதம் முதல் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு தனது நாட்டுப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சீனாவில் இருந்துகொண்டு உளவுபார்த்த குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய எழுத்தாளர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

எழுத்தாளர் யங் ஹன்ஜுனின் கைது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் மெரிஸ் பெயின் சீன அரசாங்கத்தின் இந்த செயற்பாடானது தங்களைக் கவலையடையச் செய்திருப்பதாகக் கூறியுள்ளார்.

You May also like