பிரிட்டன் எம்.பி இலங்கை விஜயம்:பலரையும் சந்திக்க திட்டம்

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜஸ்டின் வெல்பி, உயிர்த்த ஞாயிறு தினத்தில் தீவிரவாத தாக்குதல் இடம்பெற்ற தேவாலயங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்படி நாளை வியாழக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்கின்ற அவர், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு காலை 8.30 அளவில் செல்லவுள்ளார்.

அன்றைய தினம் பிற்பகலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கின்ற பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர், கொழும்பிலுள்ள முக்கியமான ஆயர் குழாமையும் சந்திக்கவுள்ளார்.

அதேவேளை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை விஜயம் செய்யவுள்ள அவர், பௌத்த மக்களின் பெருந்தலைமைத் துவங்களான மல்வத்துப்பீடம் மற்றும் அஸ்கிரியப்பீட மகாநாயக்க தேரர்களையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like