மீண்டும் மஹிந்த – மைத்திரி சந்திப்பு விரைவில்

எதிர்வரும் 48 மணிநேரத்திற்குள் மிகவும் தீர்க்கமான பேச்சுவார்த்தை தொடர்பான தகவலை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் டி சொய்ஸா தெரிவித்தார்.

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஏற்கனவே நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இவர்கள் இருவருக்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றது.

இதில் அரசியல் மட்டத்தில் பெரிதாக எதுவும் கலந்துரையாடப்படவில்லை என்ற போதிலும் சில விடயங்களே பேசப்பட்டதாக அறியமுடிந்தது.

இந்த நிலையிலேயே மீண்டும் இவ்விருவர் இடையே தீர்மானமிக்க சந்திப்பொன்று இடம்பெறவிருப்பதாக ரஞ்ஜித் டி சொய்ஸா எம்.பி தெரிவித்தார்.

You May also like