இரவில் நடந்த சந்திப்பில் சஜித்திற்கு கரு ஆலோசனை

கட்சிக்குள் இருக்கின்ற பிரச்சினைகள், நெருக்கடிகளை வீதிகளில் சொல்லித்திரியாமல் உள்வீட்டில் பேச்சுநடத்தி தீர்த்துக்கொள்ளுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆலாசனை வழங்கியுள்ளார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அமைச்சர் சஜித் பிரேமதாஸவை சந்தித்திருக்கும் சபாநாயகர், இவ்வாறு ஆலோசனை வழங்கியிருப்பதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கவவோடு பல்வேறு பிரசாரங்களை ஆரம்பித்திருக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ கட்சியின் தலைமைக்கு எதிராக செயற்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருக்கிறது.

இந்த நிலையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் அதிகமாக நீண்ட பேச்சுவார்த்தையாக இது இடம்பெற்றிருப்பதாகவும், எந்தவொரு வாய்த்தர்க்கமும் இன்றி அமைதியான முறையில் சபாநாயகரது ஆலோசனைகளை அமைச்சர் சஜித் செவிகொடுத்ததாகவும் அறியமுடிகின்றது.

You May also like