மங்களவின் இல்லத்தில் ஐ.தே.க இன்று மந்திராலோசனை

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் இன்று இரவு கூடி கலந்துரையாடவுள்ளனர்.

இந்த கலந்துரையாடலானது நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.

அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சந்தர்ப்பத்தை வழங்குவது குறித்த அடுத்த மக்கள் கூட்டம் எதிர்வரும் செப்டம்பர் 05ஆ;ம திகதி குருநாகலையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கலந்தாலோசிப்பதற்காகவே இந்த சந்திப்பு இன்று புதன்கிழமை இரவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

You May also like