அக்கில, கேன் இந்தியாவுக்கு விரைவு

பந்துவீச்சில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து அதுகுறித்த பரிசோதனைகளுக்காக இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்கில தனஞ்ஜன இந்தியா சென்றுள்ளார்.

இவருடன் நியூஸிலாந்து அணியின் தலைவரான கேன் வில்லியம்சனும் நேற்று இந்தியா சென்றுள்ளார்.

இவர்களது பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக அண்மையில் காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற போட்டிகளை அடுத்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து அவர்களின் பந்துவீச்சில் காணப்படுகின்ற குறைநிறைகளை பரிசீலனை செய்வதற்காக இந்தியாவுக்கு அழைக்கப்பட்டு 14 நாட்கள் பரிசீலனை செய்யப்படவுள்ளமை குறப்பிடத்தக்கது.

You May also like