தமிழரின் எதிர்ப்பை நிராகரிக்குமாறு மல்வத்துப்பீடம் வலியுறுத்து

தமிழ் மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் எதிர்ப்புக்களுக்கு அடிபணிந்து இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவை நீக்கிவிட வேண்டாம் என்று மல்வத்துப்பீட துணைநாயக்கர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் வலியுறுத்தியுள்ளார்.

கண்டி அஸ்கிரிய விகாரையின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை சமய நிகழ்வொன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இலங்கையின் 23ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனத்தை அடுத்து தமிழ் மக்களும், சர்வதேச சமூகமும் அதனை எதிர்த்தனர். ஆனாலும் அரசாங்கம் இந்த எதிர்ப்புகளுக்கு அஞ்சி நியமனத்தை இரத்து செய்யக்கூடாது என்று வலியுறுத்தினார்.

You May also like