பதவிபறிக்கப்பட்ட எஸ்.பி, டிலான் மஹிந்தவுடன் சங்கமம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா மற்றும் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொண்டுள்ளனர்.

சுதந்திரக் கட்சியில் பொருளாளராக பதவிவகித்த நாடாளுமன்ற உறுப்பனர் எஸ்.பி.திஸாநாயக்க அண்மையில் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.

அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவும் சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் உட்பட அமைத்துப் பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இவ்வாறு பதவிகள் பறிக்கப்பட்டு இரண்டு நாட்களாகின்ற நிலையில் குறித்த இருவரும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன முன்னணியில் இன்று வியாழக்கிழமை காலை இணைந்துகொண்டனர்.

You May also like