ஐ.தே.கவின் வேட்பாளர் அறிவிப்பு இன்னும் ஒன்றரை வாரத்தில்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்கிற அறிவிப்பு இன்றும் ஒன்றரை வாரத்தில் வெளியாகும் என்று அக்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் கொழும்பிலுள்ள இல்லத்தில் நேற்று புதன்கிழமை இரவு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பொன்று இடம்பெற்றது.

குறிப்பாக கட்சியின் பிரதித் தலைவரும், வீடமைப்பு அமைச்சருமான சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க எதிர்பார்க்கின்ற நிலையில், அவருக்கு சார்பாக குரல்கொடுத்துவரும் எம்.பிக்;களே இவ்வாறு கூடி ஆராய்ந்திருக்கின்றனர்.

இந்த கலந்துரையாடல் தொடர்பாக கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் பிரசாரங்கள் தற்போது முடங்கிவிட்டதாக குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்கிற முடிவு இன்னும் ஒன்றரை வாரங்களில் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.

இதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவும் கிட்டும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

You May also like