மன்னாரில் மூவர் அதிரடியாக கைது

மன்னார் உதயபுரம் பிரதேசத்தில் இரண்டரை கிலோ எடைகொண்ட கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை பொலிஸ் விசேட சோதனைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

18,26,43 ஆகிய வயது பிரிவினரைக் கொண்ட சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு இந்த கேரள கஞ்சா சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக இந்தியாவிலிருந்து கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

You May also like