நல்லூர் திருவிழாவில் 30 பவுண் நகை திருட்டு

நல்லூர் கந்த சுவாமி ஆலய தேர்த் திருவிழா இடம்பெற்று வருவதை அனைவரும் அறிவீர்கள்.

ஆனால் திருவிழா கூட்டத்தை சாதகமாகப் பயன்படுத்தி 30 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

திருவிழாவில் பங்கேற்ற அடியவர்கள் 12 பேரிடம் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

அவற்றில் தாலிக்கொடி ஒன்றும் 11 சங்கிலிகளும் அடங்குகின்றன. ஆண்கள் மூவரும் தமது தங்கச் சங்கிலியைப் பறிகொடுத்ததாக முறையிட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டார்.

ஆலய வெளி வீதியில் 60 பாதுகாப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன் 600 பொலிஸாருக்கு மேல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையிலும் இவ்வாறு திருடர்கள் கைசரிசையை காண்பித்துள்ளனர்.

You May also like