￰ரிஷாட்டிற்கு எதிராக பிக்குகள் ஆர்ப்பாட்டம்

மாத்தறை அஹங்கமயில் திறன் அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட ஹோட்டல் பாடசாலையைத் திறந்து வைப்பதற்கு அமைச்சர் ரிஷாட்பதியுதீன் விஜயம் செய்வதற்கு எதிராக இன்று (31) பௌத்த கடும்போக்காளர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முஸ்லிம் விரோதக் கோஷங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி நின்ற இவர்கள்,காத்தான்குடி,கல்முனையில் நடந்து கொள்வதைப் போன்று இங்கு எவர்களும் நடந்து கொள்ளக் கூடாதென்றும் கூக்குரலிட்டனர்.

அமைச்சர் ரிஷாட்பதியுதீன் இப்பகுதிக்கு விஜயம் செய்வதற்கு இரு மணித்தியாலயங்களுக்கு முன்னரே இக்கடும் போக்கர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிலைமைகளின் விபரீதங்களை உணர்ந்து கொண்ட அமைச்சர் தனது விஜயத்தை ரத்துச் செய்ததையடுத்து குறித்த பாடசாலை இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரன,பிரதியமைச்சர் கருணாதிலக்க பரணவித்தாரண உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளால் திறந்து வைக்கப்பட்டது.

You May also like