பெசில் ராஜபக்ச ஜனாதிபதியாவார்: பிரபல ஜோதிடர் பரபரப்பு தகவல்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சருமான பெசில் ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாவார் என்ற பரபரப்பு ஜோதிட ஆருடத்தை வெளியிட்டிருக்கின்றார் தென்னிலங்கையின் பிரபல ஜோதிடர் இந்திக்க தொடவத்த.

பெசில் ராஜபக்ச ஜனாதிபதியாவதற்கு சிறிதுகாலம் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

சமூக வலைத்தளத்தில் இயங்குகின்ற தனியார் ஊடகமொன்றுடன் நேற்று முன்தினம் நடத்திய நேர்காணலில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

ஆனால் பொதுஜன முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஒருபோதும் ஜனாதிபதியாக முடியாது என்று குறிப்பிட்ட அவர், பெசில் ராஜபக்சவின் இராஜயோகம் மற்றும் அவருக்கு இருக்கின்ற சாத்தியமான விடயங்களின் ஊடாக கோட்டாபயவுக்கு சந்தர்ப்பம் உருவாகலாம் என்றும் கூறினார்.

ஜோதிடர் இந்திக்க தொடவத்த என்பவர் பிறப்பிலேயே கண் தெரியாதவர் என்பதோடு கடந்த ஆட்சிமாற்றம், எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டாலும் ஆசனத்தில் அமரமுடியாமல் மீண்டும் பதவியை இழப்பார் போன்ற முக்கிய ஆருடங்களை வெளியிட்டு பிரபல்யம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You May also like