மைத்திரி யாழ் விஜயம்: மறைத்து வைக்கப்பட்ட வெடிபொருட்கள் மீட்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ். குடாநாட்டிற்கு விஜயம் செய்திருக்கும் நிலையில் பருத்தித்துறை பிரதேசத்தில் ஒருதொகை போர் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பருத்தித்துறை – துடுத்தன கிழக்கு பகுதியில் அரசாங்க காணியொன்றலிருந்து புதைக்கப்பட்டிருந்த நிலையில் இவை பொலிஸ் அதிரடிப்படையால் மீட்கப்பட்டுள்ளன.

2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள கிளைமோர் குண்டு ஒன்று, 60 மில்லி மீற்றர் ரக 4 மோட்டார் ரவைகள், 40 மில்லி மீற்றர் ரக கைக்குண்டு துவக்கி இரவைகள் 12 மற்றும் பெராலைட் மூன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிரடிப்படையின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

You May also like