மீண்டும் யுத்த விமானத்தில் பறந்தார் அபிநந்தன்

6 மாத ஓய்வின் பின்னர் இந்திய விமானப்படை வீரர் விங் கொமாண்டர் அபிநந்தன் வர்தமான் யுத்த விமானத்தில் பறந்துள்ளார்.

இந்திய விமானப்படை வீரர் விங் கொமாண்டர் அபிநந்தன் வர்தமான் இன்று யுத்த விமானத்தில் மீண்டும் பறந்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதன்கோட் விமானப்படை தளத்திலிருந்து, இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 ரக விமானத்திலேயே அவர் பறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய விமானப்படை வீரர் விங் கொமாண்டர் அபிநந்தன் வர்தமானுடன், விமானப்படை தலைமை அதிகாரியான ஏர் மார்ஷல் பி.எஸ்.தனோயும் பறந்துள்ளதாக இந்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்திய விமானப்படை வீரர் விங் கொமாண்டர் அபிநந்தன் வர்தமான் சென்ற யுத்த விமானத்தின் மீது பாகிஸ்தான் கடந்த பெப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தியிருந்தது.

இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னர் இந்திய விமானப்படை வீரர் விங் கொமாண்டர் அபிநந்தன் வர்தமானை பாகிஸ்தான் தமது கட்டுப்பாட்டிற்குள் எடுத்திருந்தது.

பல சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்திய விமானப்படை வீரர் விங் கொமாண்டர் அபிநந்தன் வர்தமான் இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் வைத்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • அருண் பிரசாத்

You May also like