சச்சினை வீழ்த்தியதே மிகப்பெரிய மகிழ்ச்சி: அஜந்த மெண்டிஸ்

இந்திய முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரின் விக்கட்டினை வீழ்த்தியதை ஒருநாளும் மறக்க முடியாது. அதுவே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி எனக் கருதுவதாக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளராக அஜந்த மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வுபெறும் அறிவிப்பை விடுப்பதற்காக கொழும்பில் அவர் விசேட ஊடக சந்திப்பை நடத்தினார்.

இதன்போதே அவர் இந்தக் கருத்தைப் பதிவுசெய்தார்.

அதேபோல இந்திய அணியின் 04 வீரர்கள் தாம் விளையாடியபோது 10 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்தவர்கள் என்ற நிலையில் அவர்களுடைய விக்கெட்டுக்களை வீழ்த்தியமையும் தனக்குக் கிடைத்த பெருவெற்றியாகும் என்றும் அவர் கூறினார்.

You May also like