அரசாங்கத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்வேன்: ஜி.எல் பீரிஸ்

ஜனாதிபதி தேர்தல் உட்பட எதிர்வரும் தேர்தல்களை அரசாங்கம் திட்டமிட்டவாறு தாமதப்படுத்த முயற்சித்தால் அரசாங்கத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்வதாக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

காலி எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள அதேவேளை இந்த வருட இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைவரும், முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தேர்தல்களைப் பிற்போடச்செய்ய அரசாங்கம் சூழ்ச்சி செய்வதாக குற்றஞ்சாட்டினார்.

You May also like