கோட்டா குறித்து ஆராய அம்பாந்தோட்டைக்கு விரைந்த சி.ஐ.டி

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் பெயர் 2005ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் இருக்கிறதா இல்லையா என்பதை பார்ப்பதற்காக இரகசிய பொலிஸார் குழுவொன்று அம்பாந்தோட்டைக்கு விரைந்துள்ளது.

அதுமட்டுமன்றி ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச இலங்கை கடவுச்சீட்டை எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்ற விடயம் குறித்து விசாரணை செய்யவும் இன்றைய தினம் இரகசிய பொலிஸார் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு விரைந்ததாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக்கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல் பற்றி விசாரணை செய்யாமல் இரகசிய பொலிஸார் தற்போது கோட்டாபய பின்னால் செல்வதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

You May also like