ஆப்கானிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கப் படை

ஆப்கானிஸ்தானிலிருந்து 5400 அமெரிக்கப் படைகளை அந்நாட்டு அரசாங்கம் இன்னும் 20 வாரங்களிற்குள் மீளப்பெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கான் அமைதிப் பேச்சுவார்த்;தையின் ஒருபடியாக இந்த இணக்கப்பாட்டிற்கு அமெரிக்க அரசாங்கம் வந்திருப்பதாக வொஷிங்டன் உயர்மட்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்டிரம் இந்த இணக்கப்பாட்டினை உறுதிப்படுத்தும் வரை அமெரிக்கப் படைகள் ஆப்கானை விட்டு வெளியேற மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவ்வாறான இணக்கப்பாடு எட்டப்பட்ட சந்தர்ப்பத்திலேயே தாலிபானின் தாக்குதல் தொடர்பான காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலில் 16 பேர் பலியானதோடு 119 பேர் படுகாயமடைந்திருந்தனர்.

இவ்வாறான தாக்குதல்களை தாலிபான் தொடர்ந்தும் நடத்தினால் ஆப்கான் அமைதிப் பேச்சுவார்த்தை முறியும் அபாயத்தை எட்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You May also like