ஐ.தே.கவின் அடுத்த திட்டம்: அம்பலப்படுத்தும் ஹாஷிம்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எந்த நெருக்கடியும் இல்லை என்று அக்கட்சியின் தவிசாளரான அமைச்சர் கபீர் ஹாஸிம் தெரிவித்தார்.

கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவில் வைத்து எமது ஊடகப் பிரிவுக்கு இன்று புதன்கிழமை கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறினார்.

எதிர்தரப்பினரே எமது கட்சிக்குள் பிளவு நெருக்கடி இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் அப்படி எந்தப் பிரச்சினையும் கட்சிக்குள் கிடையாது என்று அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இன்னும் சில தினங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துரையாடவுள்ளதாகவும், எதிர்கால தேர்தல்களில் கட்சியின் நடவடிக்கை குறித்து அதன்போது திட்டமிடப்படும் என்றும் அவர் கூறினார்.

You May also like