கோட்டாவுடன் இணைகிறார் முத்தையா முரளிதரன்?

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் வியத்மக என்கிற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிகழ்வு எதிர்வரும் 08ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக கடந்த காலங்களிலும் பல்வேறு இடங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே எதிர்வரும் 08ஆம் திகதி கொழும்பு ஷெங்கிரிலா விடுதியில் நடைபெறவுள்ள நிகழ்வுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

You May also like