தீவிரவாதிகளிடம் 06 பில்லியன் சொத்தா? புதிய தகவல் அம்பலம்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட 293 சந்தேக நபர்களில் 41 பேரது 100 வகையான வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை முற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

41 பேரது 100 வகையான வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், 134 மில்லியன் ரூபாக்களுக்கும் அதிகமான பணம் இந்த கணக்குகளில் காணப்பட்டன என்றும் அவர் கூறினார்.

இதுதவிர, சந்தேக நபர்களிடம் இருந்த 20 மில்லியனுக்கும் அதிகமான பணம் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாத சந்தேக நபர்களின் 06 பில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

You May also like