சஜித் தொடர்பில் ரணில் இன்று எடுத்த முடிக்கிய முடிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அக்கட்சியின் பிரதித் தலைவரான வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையே மிகவிரைவில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

அலரிமாளிகையில் பிரதமர் ரணில் தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் நடைபெற்றது.

சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரமாக இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் தீர்க்கமான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று தெரியவருகின்றது.

எவ்வாறாயினும் அடுத்து வரும் தினங்களில் மிகவிரைவில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே சந்திப்பொன்றை ஏற்பாடு செய்ய இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

You May also like