கோட்டாபய இன்று வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் நடத்திய பேச்சு வெற்றிகரமாக முடிந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி – பொதுஜன முன்னணிக்கு இடையிலான 08ஆவது சுற்றுப் பேச்சு கொழும்பிலுள்ள எதிர்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்றது.

இந்த சந்திப்பிற்கு முதன்முதலாக கோட்டாபய ராஜபக்சவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேச்சு முடிந்தவுடன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கோட்டாபய ராஜபக்ச, சுதந்திரக் கட்சியின் ஆதரவும் தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.

You May also like