கோட்டாவுக்கு அமெரிக்கா சொன்ன அறிவுரை:பரபரப்பு தகவல்

கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல்கள் மற்றும் மோசடிகள் குறித்த குற்றச்சாட்டிலிருந்து விலகி அவற்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சார்பாக ஒதுக்கிவிட்டு தனியானதும், சுத்தமான ஒரு நபராக தேர்தலில் வெளிப்படுத்த முயற்சிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அமெரிக்கா ஆலோசனை கூறியுள்ளது.

இதுகுறித்து ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவின் விசேட அரசியல் நிபுணருக்கும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் நெருங்கிய பேச்சு நடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போதே இந்த ஆலோசனை கூறப்பட்டிருக்கிறது.

அதேபோல வெற்றிபெற வேண்டுமாயின் மிகவும் பொறுமையை கடைபிடிப்பது அவசியம் எனவும் கோட்டாபயவுக்கு வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May also like