கொழும்பு தாமரைக் கோபுரத்தின் திறப்பு விழா திகதி இதுதான்!

தெற்காசியாவின் முதலாவது உயர்ந்த கோபுரமான கொழும்பு தாமரைக் கோபுரம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

இதன்படி எதிர்வரும் 16ஆம் திகதி இதற்கான நிழக்வு நடைபெறவுள்ளது.

350 மீற்றர் உயரத்தைக் கொண்ட இந்த தாமரைக் கோபுரமானது 17 மாடிகளைக் கொண்டுள்ளது. நிர்மாணப் பணிகளுக்காக 104.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

இதன் திறப்பு விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளதோடு இதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.

2012ஆம் ஆண்டு கொழும்பு தாமரைக் கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

You May also like