ரணிலை மிஞ்சும் சஜித்: அடுத்தடுத்த கூட்டங்களுக்கு ஏற்பாடு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் நிபந்தனைகளை மீறி அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கான ஆதரவு கோரும் மக்கள் கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்த சஜித் அணியினர் தீர்மானித்துள்ளனர்.

இதற்கமைய மாத்தளை, மொணராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்சருமான அஷோக்க அபேசிங்க இதுகுறித்து கருத்து வெளியிடுகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த மக்கள் கூட்டம் வைப்பதால் பாதிக்கப்படாது என்று கூறினார்.

You May also like