விரைவில் பால்மா தட்டுப்பாடு ஏற்படலாம்?

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாவை தற்காலிகமாக நிறுத்துவதற்கு இறக்குமதி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இதன் காரணமாக எதிர்வரும் வாரங்களில் நாட்டில் பால்மாவிற்கான கேள்வி நிலை அதிகரிப்பும், தட்டுப்பாடும் நிலவலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பால்மாவின் விலையில் மாற்றம் கொண்டுவருவது என்பது இறக்குமதி நிறுவனங்களுக்கும், நுகர்வோர் விவகார அதிகார சபைக்கும் இடையே உள்ள ஒப்பந்தமாகும்.

இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், 50 ரூபா அதிகரிப்பை செய்ய நுகர்வோர் விவகார அதிகார சபை தீர்மானித்திருந்தது.
எனினும் இந்த விலை அதிகரிப்பை வாழ்க்கைச் செலவு குழு நிறுத்தியது.

இதன் காரணமாக விலை அதிகரிப்பை கோரும் வகையில் பால்மா இறக்குமதியை இடைநிறுத்துவதற்கு நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

You May also like