ரணில்-சம்பந்தன் சந்திப்பு: பேசிய விடயங்கள் இதோ!

ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிபீடம் ஏறினால் ஒரே வருடத்தில் இனப்பிரச்சினை மற்றும் கல்முனை விவாகரத்திற்கு தீர்வை தருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் ரணில் இன்று மாலை நாடாளுமன்றத்தில் வைத்து சந்தித்தார்.

இதன்போது அமைச்சர் சஜித் பிரேமதாச குறித்து கூட்டமைப்பினர் அதிருப்தியை வெளியிட்டதாக இந்த சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அத்துடன் இனப்பிரச்சினை விவகாரத்திற்கு தீர்வை ஏற்படுத்துதலுக்கு குறிப்பிட்ட ஒரு கால அட்டவணையின் படி செயற்படவும் பிரதமர் ரணில் விருப்பம் வெளியிட்டுள்ளார்

அதேபோல சபாநாயகர் கரு ஜயசூரிய விடயம் குறித்தும் இங்கு பேசப்பட்டுள்ளது.

அப்படி சபாநாயகர் போட்டியிட்டால் ஆதரவை வழங்க தயார் என்பதை கூட்டமைப்பினர் கூறியதாகவும் அமைச்சர் ராஜித குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் ஜே.வி.பி யினர் போட்டியிலிருந்து விலகி சபாநாயகருக்கு ஆதரவளிப்பதாக தன்னிடம் தெரிவித்ததாக கூறினார்.

அதேபோல நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வது குறித்தும் இந்த சந்திப்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டது

You May also like