சூடுபிடிக்கும் தேர்தல்:ரணில் – சம்பந்தன் இன்று சந்திப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான தீர்க்கமான பேச்சுவார்த்தை இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது. இதற்கிடையில் இந்தப் பேச்சுவார்த்தை நாடாளுமன்றக் கட்டிடத்தில் இன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஐக்கிய தேசிய முன்னணிக்குள் நெருக்கடி நிலை தொடர்கின்றது.

இதற்கிடையில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தரப்பினருடன் நேற்று முன்தினம் கொழும்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான பேச்சு நடத்தப்பட்டது.

இதன்போது எந்தவொரு தீர்க்கமான முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் பிரதமரை இன்று சந்திக்கவுள்ள கூட்டமைப்பினர், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அர்த்தமுள்ள மற்றும் யதார்த்தமுள்ள தீர்வைக் கொடுக்கும் தரப்புக்கு தங்களது ஆதரவை வழங்கவுள்ளதாக தெரிவிக்கவிருப்பதாக இரா.சம்பந்தன் மேலும் கூறினார்.

You May also like