இன்றுமுதல் கட்டுப்பணம் செலுத்தலாம்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று முதல் ஒக்ரோபர் 6ஆம் திகதி மதியம் 12 மணிவரையான அலுவலக நேரங்களில் கட்டுப்பணம் செலுத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர் ஒருவர் 50 ஆயிரம் ரூபாவையும், சுயாதீன வேட்பாளர் 75 ஆயிரம் ரூபாவையும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.

வேட்புமனுக்கள் தொடர்பான ஆட்சேபனைகள் ஒக்ரோபர் மாதம் 7ஆம் திகதி, காலை 9 மணிமுதல் முற்பகல் 11.30 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

You May also like