சஜித் பிரேமதாஸ ரணிலுக்கு கொடுத்த அதிரடி பதில்!

ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்காக நிபந்தனைகளுக்கு அடிபணியமாட்டேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்திருக்கின்றார்.

நிபந்தனைகளின்றி மனசாட்சியின் பிரகாரமே செயற்படுவேன் என்றும் அவர் சூளுரைத்திருக்கின்றார்.

களுத்துறை – மத்துகம நகரில் இன்று மாலை இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

‘பல சவால்களுக்கு மத்தியில் முற்கள் நிறைந்த பாதையிலேயே பயணித்துக்கொண்டிருக்கிறேன் – துரோகம் இழைக்கப்பட்டாலும் இலக்கை அடைந்தே தீருவேன்.

” ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு ஒருபோதும் நிபந்தனைகளுக்கு அடிபணியமாட்டேன். மனசாட்சியின் பிரகாரம் மக்களுக்கான அரசியலையே முன்னெடுப்பேன். எவரினதும் கைப்பாவையாக செயற்படமாட்டேன்.”

” நிபந்தனைகள் அடிப்படையிலேயே எனக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவி வழங்கப்படவுள்ளது என இன்று காலை ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. நான் எவரினதும் கைப்பாவை கிடையாது. அதேபோல் பதவிகளுக்காக நிபந்தனைகளை ஏற்று அரசியல் நடத்தியதும் இல்லை.

மனசாட்சியின் பிரகாரம் மக்களுக்கான அரசியலையே முன்னெடுத்துவருகின்றேன். பதவிகளைவிட சுயகௌரவமும், நாடுமே எனக்கு முக்கியம் என்பதால் ஒருபோதும் நிபந்தனைகளுக்கு அடிபணியமாட்டேன் என்பதை தெளிவாக கூறிவைக்க விரும்புகின்றேன் – என்று தெரிவித்தார் சஜித்

You May also like