சஜித்தை தோற்கடிப்பேன்: மஹிந்த அதிரடி அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அன்னச் சின்னத்தில் களமிறங்குகின்ற ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாஸவை நிச்சயம் தோற்கடித்துக்காட்டுவோம் என்று எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை துளியளவேணும் பேசாத சஜித் பிரேமதாஸ குறித்து சந்தேகம் வெளியிட்ட மஹிந்த ராஜபக்ச, கடந்த முறையைப் போன்றே அன்னச் சின்னத்தில் மீண்டும் ஆட்சிக்குவந்தால் நடக்கப்போகும் விபரீதங்களை மக்களே உணர்ந்துவிட்டார்கள் என்றும் கூறினார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸ நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பிளவுபடாத மற்றும் ஒற்றையாட்சிக்குள் முழு அளவிலான அதிகாரப் பரவலை வழங்கவும் தாம் தயார் என்பதை நேற்று நடந்த தனது முதலாவது ஊடக சந்திப்பிலும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டதோடு மீண்டும் அன்னச் சின்னத்திலேயே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி போட்டியிடும் என்பதையும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இன்றைய தினம் காலை கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் சாந்தி கர்மா பயிற்சியாளர்களுக்கான விசேட மாநாடு நடத்தப்பட்டது.

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்சவும் கலந்துகொண்டிருந்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை தோற்கடித்துக்காட்டுவதாக சூளுரைத்தார்.

You May also like