ஐ.தே.கவில் இணைவோம்: மைத்ரிக்கு எச்சரிக்கை!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டால் ஐக்கிய தேசியக் கட்சியில் சென்று இணைந்து கொள்வோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எம். பிக்கள் சிலர் கட்சித் தலைமையிடம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இப்படியான சூழ்நிலையில் நாளை சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ஜனாதிபதி தலைமையில் கூடவுள்ளது.

இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் சங்கமிப்பதா? இல்லையா? என்ற தீர்மானமும் எடுக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் நாளைய சந்திப்பு மிகுந்த வைத்த விவாதங்களுடன் நிறைவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You May also like