BREAKING:அச்சம் காரணமாக கோட்டை ரயில் நிலையத்தில் பொலிஸார் குவிப்பு!

கொழும்பு கோட்டை மத்திய ரயில் நிலையத்தில் அதிகளவான பொலிஸார் தற்போது கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்றுடன் ஒருவாரத்தை அடைந்திருக்கின்ற நிலையில் ஓய்வுபெற்ற அதிகாரிகளை அழைத்துள்ள போக்குவரத்து அமைச்சு அவர்களின் ஊடாக 19 ரயில் சேவைகளை நடத்த ஆரம்பித்திருக்கிறது.

இந்த நிலையில் ஒரு ரயிலுக்கு இரண்டு பொலிஸார் வீதம் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல கோட்டை ரயில் நிலையத்திலும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like