இன்று விஷேட அறிவிப்பை விடுக்கவுள்ளார் தொண்டமான்!

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்கிற தீர்மானத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் இன்று அறிவிக்கவுள்ளார்.

காங்கிரசின் மத்திய குழு கூட்டம் அட்டனில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தொன்போதே மேற்படி அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் தொண்டைமானின் ஆதரவு தங்களுக்கே கிடைக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கடந்த வாரம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May also like