எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை ஆரம்பம்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை ஆரம்பமாகின

காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்கு பதிவு இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

17 தொகுதிகளில் 47 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் இந்த வாக்கு பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.

வாக்களிப்புக்காக மக்கள் மிகுந்த அர்வத்துடன் வருகைத் தருவதை காண கூடியதாக உள்ளதென எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்காக 53,397 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தலில் ஐந்து அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, 155 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இவ்வாறு போட்டியிடும் வேட்பாளர்கள் மத்தியில் 28 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிடுகின்றது.

வாக்களிப்புக்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட அடையாளஅட்டையை கொண்டு வர வேண்டும் ஆணைக்குழு குறிப்பிடுகின்றது.

You May also like