வட-கிழக்கு இணைக்க வேண்டும்: ஜனாதிபதி வேட்பாளர் நந்திமித்ர வலியுறுத்து!

வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்று நவ சமசமாஜக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான பெத்தேகமகே நந்திமித்ர வலியுறுத்தியுள்ளார்.

எமது செய்தி இணையத்தளத்துடன் நடத்திய நேர்காணலில் அவர் இதனைக் கூறினார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டு சுய நிர்ணய உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

அதேவேளை புதிய அரசியலமைப்புப் பணிகளுக்கு எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களே முட்டுக்கட்டையாக இருப்பதாக குற்றஞ்சாட்டிய அவர், அரசியலமைப்பு உருவாக்கற் பணிகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

You May also like