மட்டக்குளி வெடிபொருள் நிரம்பிய வாகனம்: உண்மை இதுதான்!

கொழும்பு மட்டக்குளி பிரதேசத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகிலுள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் இன்று காலை ஏற்பட்ட வெடிபொருள் நிரம்பிய வாகனம் தொடர்பான உண்மை தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கு இடமான அதிசொகுசு வாகனத்தினால் இன்று காலை அங்கு பதற்றம் ஏற்பட்டதோடு வெடிப்புச் சம்பவம் நிகழாம் என்கிற பீதியும் ஏற்பட்டது.

இதனையடுத்து பொலிஸார் அங்கு விரைந்து விசாரணை செய்தனர்.

இதற்கமைய அந்த வாகனம் நேற்றிரவு குறித்த பகுதியில் பயணித்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதில் உரிமையாளர் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டுச் சென்றிருக்கின்றார்.

பின்னர் இன்று காலை அந்த இடத்திற்கு வாகனத்தை எடுப்பதற்காக சென்றபோது அதற்கிடையில் அங்கு பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.

எனினும் அந்த வாகனத்தில் எந்தவொரு வெடிபொருளும் இருக்கவில்லை என்று பொலிஸார் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

You May also like