EXCLUSIVE:கட்சித் தாவினாரா வடிவேல்? உண்மை இதுதான்

ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைய பேச்சு நடகிதியிருப்பதாக தகவல்கள் வெளியகியுள்ளன.

கடந்த வருடம் ஏற்பட்ட அரசியலமைப்பு சூழ்ச்சி அரசின் போது வடிவேல் சுரேஷ் எம்.பி ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்க்ஷவுடன் இணைந்தார்.

பின்னர் அவர் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டார்.

இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தளுக்கு இன்னும் சிறிது நாட்களே உள்ள நிலையில் மீண்டும் மஹிந்த அணியுடன் வடிவேல் சுரேஷ் எம்.பி இணையவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இது பற்றி வடிவேல் சுரேஷ் எம்.பியிடம் True news Tamil வினவியகிபோது இந்த செய்தியை அவர் மறுத்தார்.

You May also like