EXCLUSIVE:சஜித்திற்கு கரம்கொடுத்த சம்பந்தன் முடிவு:அறிவிக்கவும் ஏற்பாடு?

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.

இதனை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.சிவமோகன் எமது செய்திப் பிரிவுக்கு உறுதிப்படுத்தினார்.

எவ்வாறாயினும் நாளை புதன்கிழமை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக முற்பகலில் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்போது இறுதிமுடிவு எடுக்கப்படும் என்று கூறிய அவர், சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தை பகிரங்கமாக தெரியப்படுத்த வேண்டாம் என்கிற கோரிக்கையை கூட்டமைப்பின் தலைவரிடம் முன்வைக்கவுள்ளதாகவும் கூறினார்.

You May also like