முல்லைத்தீவில் பாரிய விபத்து: பயணிக்குக்கு ஆனது என்ன?

 

முல்லைத்தீவு – பனிக்கன்குளம் பகுதியில் இன்று இரவு 8.30 அளவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்றை இராணுவ வாகனம் மோதியதில் தெய்வாதீனமாக பயணிகள் எவரும் காயங்கள் உயிரிழப்புக்கள் இல்லாமல் தப்பியுள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

இன்று இரவு எட்டு முப்பது மணி அளவில் பனிக்கன்குளம் பகுதியில் பேருந்து தரிப்பிடத்தில் பயணியை ஏற்றுவதற்காக கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வருகை தந்து கொண்டிருந்த அரசு பேருந்து நிறுத்தி பயணியை ஏற்றிக்கொண்டு தனது பயணத்தை ஆரம்பிக்க முற்பட்ட வேளை பின்னால் வந்த இராணுவ வாகனம் வேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்து பேருந்துடன் மோதியதால் பேருந்து சேதமடைந்துள்ளது.

தெய்வாதீனமாக உயிரிழப்புகள் காயங்கள் ஏற்படவில்லை.

இந்நிலையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த மாங்குளம் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May also like